மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (CAAM) படி, நாட்டின் எல்லைக் கதவுகள் திறக்கப்படும் முதல் நாளில், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் மொத்தம் 119 விமானங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஒரு அறிக்கையில், CAAM தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ செஸ்டர் வூ, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட விமான அட்டவணையின் அடிப்படையில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) உள்ள இரண்டு முனையங்களும் 110 விமானங்களைப் பெறும். அவற்றில் ஹாங்காங், இன்சியான், மெல்போர்ன், நியூ டெல்லி, தோஹா, இஸ்தான்புல் மற்றும் லண்டன் ஆகிய நாடுகளில் இருந்து வருகிறது.
பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் (PEN) மொத்தம் ஏழு விமானங்கள் வருகை தரும். ஐந்து சிங்கப்பூர் மற்றும் இரண்டு தைபேயில் இருந்து வரவிருக்கின்றன. அதே நேரத்தில் லங்காவி அனைத்துலக விமான நிலையம் (LGK) மற்றும் ஈப்போ விமான நிலையம் (IPH) ஆகியவை சிங்கப்பூரில் இருந்து தலா ஒரு விமானம் வரும் என்று அவர் கூறினார்.








