பரியாவா ஆற்று நீர் மாசடைந்துள்ளதால், மக்கள் அதை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெனிங்கா, ஏப்ரல் 2 :

இங்குள்ள பரியாவா ஆற்று நீர், பிளைவூட் பசை கசிவுகளால் மாசடைந்துள்ளதால், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்று நீரை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு 11.40 மணியளவில் இங்குள்ள சிம்பாங் பாரியாவா என்ற இடத்தில் 10 டன் எடை கொண்ட லோரி விபத்துக்குள்ளானதில், இக்கசிவு ஏற்பட்டதாக கெனிங்காவ் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை கண்காணிப்பாளர் நோர் ரஃபிதா காசிம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், கோத்தா கினாபாலுவில் இருந்து கெனிங்காவிலுள்ள கோசினார் சூக் பிளைவுட் தொழிற்சாலைக்கு சென்ற ஷாக்மேன் டிரெய்லர் ரக லோரி ஆற்றுப்பகுதியில் விபத்துக்குள்ளானது.

ஜாலான் பரியாவா சந்திப்பு அருகே மலைப்பாதையில் மோதுவதற்கு முன்பு, லோரி மலையிலிருந்து கீழே செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடது கரையில் மோதியது.

இந்த விபத்தில் “லோரி ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை, ஆனால் இந்த விபத்தின் விளைவாக கம்போங் பாரியாவாவில் உள்ள சிறிய ஆற்றுப் பகுதிக்குள் பிளைவூட் பசை கலந்துவிட்டது,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

கெனிங்காவ் சுகாதாரத் துறை மற்றும் ரோயல் மலேசியன் காவல்துறை (PDRM) குழு சம்பவ இடத்திற்குச் சென்று, ஆய்வுக்காக ஆற்று நீர் மாதிரிகளை எடுத்துச் சென்றதாக நோர் ரஃபிடா கூறினார்.

மேலத்திக நடவடிக்கைக்காக, அறிக்கைகள் சுற்றுச்சூழல் துறைக்கு (DOE) சமர்ப்பிக்கப்படும் என்றார்.

“பொதுமக்கள் ஆற்றில் மாசு இருப்பதாக சந்தேகிக்கப்படும் எந்த செயல்களையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த வழக்கு விதி 10 LN 166/59 இன் படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here