வீட்டு இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை ஜிஞ்ஜாங் செலாத்தான் தம்பாஹான் மக்கள் முறையீடு

கோலாலம்பூர்:

ஜிஞ்ஜாங் செலாத்தான் தம்பாஹான் குடியிருப்பாளர்கள், அவர்கள் குடியிருக்கும் இடத்தை காலி செய்வதற்கான இழப்பீடு, புதிய வீட்டுகள் தொடர்பிலான கோரிக்கைகளை தீர்த்து வைக்கக் கோரி ஜிஞ்ஜாங் செலாத்தான் தம்பாஹான் குடியிருப்பாளர் ஒருங்கிணைப்பு செயற்குழு டிபிகேஎல் எனப்படும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திடம் முறையிட்டது.

புதிய வீட்டை பெறுவதற்காக முறையீடு செய்த 17 குடியிருப்பாளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக அந்த ஒருங்கிணைப்பு செயற்குழு துணைச் செயலாளர் கே.செல்வகுமார் குறிப்பிட்டார்.

வீடு வழங்கப்படும் என்று முன்னதாக அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் அவர்களுக்கான உரிமை மறுக்கப்பட்டுவிட்டது என்றார் அவர்.

கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி, கோலாலம்பூர் டத்தோ பண்டாரின் அதிகாரத்திற்கு உட்பட்ட அந்த வீடமைப்பு நிலம், மேம்பாட்டளரிடம் விற்கப்பட்ட சமயத்தில் குடியிருப்பாளர்களுக்கு வீடு வழங்குவதுதொடர்பில் இணக்கம் காணப்பட்டிருந்தது.

ஆனால் குறிப்பிடப்பட்ட காலகட்டம் தாண்டிய நிலையில் இதுவரையில் 70 விழுக்காடு குடியிருப்பு பகுதிகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாம் கட்ட குடும்பங்களுக்கான வீடுகளும் கட்டப்படவில்லை, இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை என்று அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here