கிள்ளான், ஏப்ரல் 4 :
கிள்ளான் ஆற்றங்கரையோரம் தேங்கும் குப்பைகளை, ஆறுகளை சுத்தம் செய்யும் இயந்திரங்களான, இன்டர்செப்டர் மூலம், மாதம் ஒன்றுக்கு, 500 டன்கள் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று மாதங்களில் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சிலாங்கூர் கடல்வழி நுழைவாயில் (SMG) திட்டத்தின் மூலம் இது செய்யப்படும் என்றும் உள்கட்டமைப்பு, பொதுப் பயன்பாடுகளுக்கான மாநில நிலைக்குழுத் தலைவர் இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.
துப்புரவு பணியின் தொடக்கத்தில் 1,500 டன்கள் முதல் 2,000 டன்கள் வரை சேகரிக்கப்பட்ட குப்பைகளை ஒப்பிடுகையில், தற்போதைய குப்பை சேகரிப்பு மாதத்திற்கு சுமார் 850 டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளதாக
அவர் கூறினார்.
இலக்கை அடைய, நான்கு உள்ளாட்சி அமைப்புகள் (பிபிடி) தங்கள் நிர்வாகப் பகுதியின் கீழ் ஆற்றின் பாதையில் குப்பைப் பொறிகளை (லாக் பூம்ஸ்) நிறுவும் என்றார்.
“சுங்கை கிள்ளான் குப்பை சேகரிப்பை 850 டன்களிலிருந்து மாதாந்தம் 500 டன்களாக மாநில அரசாங்கம் குறைக்க விரும்புகிறது என்றார்.









