பற்றாக்குறை ஏற்பட்ட எரிப்பொருள் நிலையங்களுக்கு டீசல் விநியோகம் முழுமையாக சீர்செய்யப்படும்- பெட்ரோனாஸ் நிறுவனம்

கோலாலம்பூர்:

டீசல் பற்றாக்குறை நிலவிய அனைத்து பெட்ரோனாஸ் எரிப்பொருள் நிலையங்களிலும் டீசல் விநியோகம் முழுமையாக மீட்டமைக்கப்படும் என்று பெட்ரோனாஸ் நிறுவனம் (PDG) அறிவித்துள்ளது.

குறித்த மீள்சீரமைப்பு மற்றும் விநியோகம் அடுத்த இரண்டு நாட்களுக்குள் சீர்செய்யப்படும் என்று நேற்று (டிசம்பர் 27) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு, உங்களின் வாழ்க்கையை எளிமையாகவும் சிறப்பாகவும் மாற்றுவதற்காக தடையில்லா சேவைகளை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தற்காலிக இடையூறுகளின் போது உங்கள் பொறுமை மற்றும் புரிதலை நாங்கள் பாராட்டுகிறோம்,” என்று அது அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

கடந்த செவ்வாயன்று, நாடு முழுவதும் உள்ள அதன் பல எரிப்பொருள் நிலையங்கள் டீசல் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக நிறுவனம் தெரிவித்தது, மேலும் இந்த சிக்கல் டிசம்பர் 31, 2023 வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சரவாக் மற்றும் சபாவில் உள்ள அனைத்து பெட்ரோனாஸ் பெட்ரோல் நிலையங்களிலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக சரவாக் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here