குழந்தைகளை ரமலான் பசாருக்கு அழைத்து வராதீர்கள் என்கிறார் டாக்டர் நூர் அஸ்மி

பாகான் செராய், ஏப்ரல் 4 :

கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதிச்செய்ய, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ரமலான் பசாருக்கு அழைத்து வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நூர் அஸ்மி கசாலி தெரிவித்துள்ளார்.

நாடு கோவிட்-19 இறுதி நிலைக்கு மாறினாலும், குறிப்பாக இதுவரை தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் நெரிசலான இடங்களுக்குச் செல்வது நல்லதல்ல என்றார்.

“ரமலானின் முதல் நாளில், பலர் தங்கள் குழந்தைகளை, குறிப்பாக சிறு குழந்தைகளை அழைத்துக்கொண்டு பாகான் செராய் ரமலான் பசார்களுக்குச் செல்வதைக் காணலாம் என்று நேற்று, இங்குள்ள பாகான் செராய் ரமலான் பசாரில் பேரிச்சம்பழங்களை விநியோகம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “குழந்தைகளை இதுபோன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லாமல் இருப்பது நல்லது.

சமீபத்திய தரவுகளின்படி, நாட்டில் 38 விழுக்காடு குழந்தைகள் மட்டுமே கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் இளம் பருவத்தினரில், 91.7 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாக முடித்துள்ளனர்.

“குழந்தைகளிடையே தடுப்பூசி விகிதம் இன்னும் குறைவாக இருப்பதை இது காட்டுகிறது, மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விரைவில் தடுப்பூசி போட அழைத்து வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here