கிள்ளான், ஏப்ரல் 5 :
இங்குள்ள பூலாவ் இன்டாவில் உள்ள வெஸ்ட்போர்ட் பகுதியில் நேற்று 12 கன்டெய்னர்களில் ஏற்பட்ட தீயில் பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமானதால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், மாலை 5.37 மணிக்கு தீ விபத்து குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது.
10 தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களை சேர்ந்தவர்கள் மற்றும் இயந்திரங்களுடன் 34 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
வெஸ்ட்போர்ட், அண்டலாஸ், கோத்தா அங்கேரிக், பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலாம், போர்ட் கிள்ளான், பூச்சோங், சுபாங், செர்டாங் மற்றும் கோலாலம்பூர் விமான நிலையம் (கேஎல்ஐஏ) ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களை சேர்ந்தவர்கள் உடனடி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, நான்கு மாடிகளில் அமைக்கப்பட்டிருந்த கொள்கலன் அலகுகளில் தீ விபத்து ஏற்பட்டது.
“நேற்று இரவு 9.30 நிலவரப்படி, மொத்தம் 12 யூனிட் கொள்கலன்கள் 8 கொள்கலங்களின் விபரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
“மேலும் நான்கு கொள்கலன்களின் விபரங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த தீ விபத்தில் யாரும் பாதிக்கப்பட்டவில்லை என்றும் நோராஸாம் கூறினார்.









