உலு சிலாங்கூரின் 16 பகுதிகளில் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை

உலு சிலாங்கூர், ஏப்ரல் 8 :

நேற்றிரவு, இங்குள்ள ஜாலான் கோலம் ஆயிர், கோலா குபு பாருவில் நீர்க்குழாய் உடைந்ததைத் தொடர்ந்து, உலு சிலாங்கூரில் மொத்தம் 16 பகுதிகளில் திட்டமிடப்படாத தண்ணீர் விநியோகம் தடைபட்டது.

Pengurusan Air Selangor Sdn Bhd (ஆயிர் சிலாங்கூர்) வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலம், பழுதுபார்க்கும் பணிக்காக இரவு 11.11 மணியளவில் தண்ணீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்று தெரிவித்தது.

அந்த அறிக்கையின்படி, தாமான் பேசாரா, கம்போங் ஆசாம் கும்பாங், தாமான் புக்கிட் பூங்கா, ஜாலான் பத்தாங் தெம்பாக், பெக்கன் கோலா குபு பாரு, தாமான் ஜூடா, கோல்ஃப் மைதானம், கம்போங் ஓராங் அஸ்லி துன் ரசாக் மற்றும் ஜாலான் சையத் மன்சோர் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், கோலக் குபு பாரு மருத்துவமனை, கம்போங் டகாங் சேடியா, கம்போங் கெலபா, தாமான் ஸ்ரீ டெரடை, தாமான் கோலக் குபு பாரு உத்தாமா, பொதுப்பணித் துறை குடியிருப்புகள் மற்றும் கோலக் குபு பாரு மசூதி ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன.

அறிக்கையின் படி, பழுதுபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது மற்றும் பழுதுபார்க்கும் பணியை விரைவுபடுத்தவும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இடையூறுகளின் தாக்கத்தை குறைக்கவும் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here