‘e-Tunai Belia Rahmah’ திட்டத்திற்கான பதிவு ஜூன் 26 முதல் தொடங்குகிறது

18 முதல் 20 வயதுடைய இளைஞர்கள் அல்லது உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் முழுநேர மாணவர்கள் RM200 பெறுவதற்காக, வரும் திங்கள்கிழமை (ஜூன் 26) காலை 8 மணி முதல் பதிவு செய்யலாம் என்று நிதி அமைச்சகம் (MOF) தெரிவித்துள்ளது.

“e-Tunai Belia Rahmah” திட்டத்தின் கீழ் பதிவுசெய்யும் காலம் ஜூன் 26 முதல் ஆகஸ்ட் 22 வரை திறந்திருக்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தகுதியுடைய இளைஞர்கள் Boost, Setel, Touch ‘n Go போன்ற மின்னியல் மூன்று இ-வாலட் சேவை வழங்குநர்களில் ஏதேனும் ஒன்றில் பதிவு செய்யலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘eBelia Rahmah’ பணத்தையும் மின்னியல் பணப்பை சேவை நிறுவனங்கள் வழங்கும் கூடுதல் சேவையையும் இவ்வாண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பங்கேற்கும் இ-வாலட் வழங்குநர்கள் குறித்த திட்டம் அமலில் இருக்கும் காலத்தில் அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் RM200 மின்னியல் பணத்தினை தவிர, மின்னியல் பணப்பை சேவை நிறுவனங்கள் வழங்கும் வவுச்சர்கள், கேஷ்பேக் அல்லது வெகுமதி புள்ளிகளில் தள்ளுபடிகள் போன்ற பிற சலுகைகளை வழங்குவார்கள் என்று MOF தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here