ஶ்ரீ பெர்டானாவில் 700க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுடன் பிரதமர் நோன்பு துறந்தார்

புத்ராஜெயா: பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் லமன் சாரி, ஶ்ரீ பெர்டானாவில் 700க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுடன் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஆகஸ்ட் 20, 2021 அன்று இஸ்மாயில் சப்ரி பிரதமரான பிறகு, ஶ்ரீ பெர்டானாவில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சியான இந்த நிகழ்ச்சியில், அரசின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் ஜூகி அலி மற்றும் பொது சேவைத் துறையின் இயக்குநர் ஜெனரல் டத்தோஸ்ரீ முகமட் சயாபிக் அப்துல்லாவும் கலந்து கொண்டனர்.

அரசு ஊழியர்களைத் தவிர, சிலாங்கூர் சிப்பாங்கில்  உள்ள ரூமா அமல் பைத்துல் பரோக்கா வால் மஹாப்பாவைச் சேர்ந்த 51 ஆதரவற்ற பிள்ளைகளும் இந்த நோன்பு துறப்பில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் இஸ்மாயில் சப்ரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுடன் கலந்து கொண்டு நேரத்தை செலவிட்டார். நோன்பு துறந்த பிறகு, அவர் மக்ரிப் மற்றும் இஸ்யாக் தொழுகைகளை நிறைவேற்றினார் மற்றும் தாராவிஹ் தொழுகையிலும் சேர்ந்தார். 1997 இல் கட்டப்பட்ட ஶ்ரீ பெர்டானா, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here