இரு வாகனங்கள் மோதிக்கொண்ட சாலை விபத்தில் பிரதீப் ராஜ், ஷரன் ராஜ் ஆகியோர் உயிரிழந்தனர்

ஜோகூர் பாரு, ஏப்ரல் 11 :

ஜோகூர் EDL நெடுஞ்சாலையின் R&R பகுதிக்கு அருகே, நேற்று இரவு இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில், இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இரவு 9.13 மணிக்கு சம்பவம் குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது.

தேபராவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு, இயந்திர பிரிவின் மூத்த தீயணைப்பு அதிகாரி II, கைருல் அசார் அப்துல் அஜீஸ் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.

“விபத்தில் ஒரு Toyota Vios கார் மற்றும் ஒரு Daihatsu லோரி சம்பந்தப்பட்டிருந்தது, காரின் ஓட்டுநர் மற்றும் முன் இருக்கை பயணி ஆகியோர் காருக்குள் சிக்கிக்கொண்டனர்.

“இரண்டு வாகனங்களும் நகரை நோக்கிச் செல்லும்போதே இந்த விபத்து நடந்ததாக நம்பப்படுகிறது ,” என்று அவர் இன்று கூறினார்.

அவரது கூற்றுப்படி, மீட்ப்புக்குழு உறுப்பினர்கள் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை காரிலிருந்து வெளியே அகற்றினர். அவர்கள் கே. பிரதீப் ராஜ், 23, மற்றும் ஆர். ஷரன் ராஜ், 26, என அடையாளம் காணப்பட்டது. அதே நேரத்தில் 50 வயதான லோரி ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

மீட்பு நடவடிக்கை இரவு 10.11 மணிக்கு முடிவடைந்தது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here