சுங்கை பினாங்கில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவுவதற்கு பினாங்கு நுகர்வோர் சங்கம் வலியுறுத்தல்

ஜார்ஜ் டவுன், ஏப்ரல் 12 :

சுங்கை பினாங்கில் கண்மூடித்தனமாக குப்பைகளை ஆற்றில் வீசுபவர்களைப் பிடிக்க, பினாங்கு அரசாங்கம் கண்காணிப்பு கேமராக்களை (CCTV) சுங்கை பினாங்கில் உள்ள முக்கியமான இடங்களில் நிறுவ வேண்டும் என்று பினாங்கு நுகர்வோர் சங்கத்தின் (CAP) தலைவர் முகைடின் அப்துல் காதர் வலியுறுத்தினார்.

மேலும், மாநில அதிகாரிகள் ஆற்றங்கரைகளை முடிந்தவரை, குறிப்பாக குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் வேலி அமைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

“சுங்கை பினாங்கில் சுமார் ஒரு டன் குப்பைகளை வீசிய மக்களின் அக்கறையின்மை பற்றி CAP முற்றிலும் அவர்களது அக்கறையின்மையை காட்டுகிறது. ஆற்றின் நீர் ஏற்றத்தால் சிக்கிய குப்பைகள் பினாங்கு தீவு நகர சபையால் (MBPP) தினசரி சுத்தம் செய்யப்படுகின்றன.

“எனவே, குற்றவாளிகளைப் பிடிக்க சுங்கை பினாங்கில் உள்ள முக்கிய இடங்களில் சிசிடிவிகளை நிறுவுமாறு மாநில அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், முடிந்தால், ஆற்றங்கரையில் முடிந்தவரை, குறிப்பாக குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் வேலி அமைக்குமாறும் “நமது நதிகளை சுத்தமாக வைத்திருக்க கூட்டு முயற்சி தேவை” என்றும் அவர்கூறினார்.

ஆற்றில் குப்பை கொட்டுவோருக்கு எதிரான குற்றத்திற்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சுற்றுச்சூழல் தரச் சட்டம் (EQA) 1974 இல் திருத்தம் செய்வதையும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.

அதன்மூலம் பொறுப்பற்றவர்களை நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லவும், மிகவும் கடுமையான தண்டனையை விதிக்கவும் உண்மையான அமலாக்க முயற்சிகள் தேவைப்படும் என்று அவர் கூறினார்.

“நதியிலுள்ள குப்பைகளை சுத்தப்படுத்துவது அரசாங்கத்தின் முழுப் பொறுப்பு அல்ல, பொதுச் சொத்துக்களை தங்களது உடமை போன்று பயன்படுத்துவதில் மக்களும் பொறுப்பேற்க வேண்டும்.

“இந்த பிரச்சினையை தீர்க்க பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்தின் கூட்டு முயற்சி இருந்தால், இதனை இலகுவாக சாதிக்க முடியும் ,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here