கடந்த இரு ஆண்டுகளில் 19,345 நிதி மோசடிகள் அம்பலம் – தேசிய வங்கி தகவல்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 16 :

நிதி மோசடி குற்றங்கள் தொடர்பான RM75.4 மில்லியன் இழப்புகளை உள்ளடக்கிய மொத்தம் 19,345 அறிக்கைகளை மலேசியாவின் தேசிய வங்கி (Bank Negara Malaysia- BNM) கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவு செய்துள்ளது.

இந்த எண்ணிக்கையில், 2021 ஆம் ஆண்டில் 9,158 புகார்களை உள்ளடக்கிய RM39.2 மில்லியன் நிதி இழப்பும், அதற்கு முந்தைய ஆண்டில் (2020) இது 10,187 வழக்குககளை உள்ளடக்கிய RM36.2 மில்லியன் நிதி இழப்பும் பதிவாகியதாக தேசிய வங்கி கூறியுள்ளது.

இந்த காலகட்டத்தில், இணைய முதலீட்டு மோசடி மிக உயர்ந்த எண்ணிக்கையான அறிக்கையை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here