130 கைதிகள் இன்னும் தலைமறைவாக இருப்பதால் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்

பண்டார் பாரு, ரெலாவ் தற்காலிக குடிவரவுக் கிடங்கில் இருந்து நேற்று தப்பியோடியவர்களில் 398 பேரை வெற்றிகரமாகக் கண்டுபிடித்த பின்னர், இன்னும் தலைமறைவாக உள்ள மீதமுள்ள 130 ரோஹிங்கியா கைதிகளை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கெடா காவல்துறைத் தலைவர், ஆணையர் வான் ஹசன் வான் அஹ்மட், பொது நடவடிக்கைப் படை (பிஜிஏ) மற்றும் துப்பறியும் நாய்ப் பிரிவு (கே9) உறுப்பினர்களின் கூடுதல் உதவியுடன் இன்றும் தலைமறைவான கைதிகளைக் கண்டறியும் முயற்சி தொடர்கிறது என்றார்.

கெடா, பினாங்கு மற்றும் பேராக் ஆகிய இடங்களில் உள்ள ராயல் மலேசியன் போலீஸ் (PDRM) அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களை, மலேசிய குடிவரவுத் துறையுடன் (JIM) ஈடுபடுத்தும் வகையில் சாலைத் தடைகள் (SJR) மற்றும் கைதிகளைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.

தப்பித்த கைதிகள் 99  ஆண்கள், 21  பெண்கள், 5 சிறுமிகள் மற்றும் 5 சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று, மொத்தம் 171 கைதிகளை தேடும்பணி முடக்கி விடப்பட்டது. அவர்களில் 41 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். இப்போது ​​130 கைதிகள் மட்டுமே இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

இது தப்பியோடிய 528 ரோஹிங்கியா கைதிகளில்   மீண்டும் 192 ஆண்கள், 75 பெண்கள், 63 சிறுவர்கள் மற்றும் 60 சிறுமிகள் என மொத்தம் 398 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த வான் ஹாசன், செபராங் பெராய் செலாத்தானை சுற்றியுள்ள நான்கு இடங்களிலும், பண்டார்  பாரு நான்கு எஸ்.ஜே.ஆர் மற்றும் கூலிமில் ஐந்து எஸ்.ஜே.ஆர்., ஆகிய இடங்களிலும் எஸ்.ஜே.ஆரை உள்ளடக்கிய தேடல் தொடங்கியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, கெடா காவல்துறையால் அமைக்கப்பட்ட 13 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக் குழு, சம்பவத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகிறது என்று அவர் கூறினார்.

நேற்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், Relau தற்காலிக குடிவரவு டிப்போவில் மொத்தம் 528 ரோஹிங்கியா கைதிகள் தடுப்பு கதவு மற்றும் தடுப்பு கிரில்லை உடைத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

எவ்வாறாயினும், ஆறு கைதிகளும் ஜாவிக்கு அருகில் தெற்கு நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் (பிளஸ்) கிலோமீட்டர் 168 இல் சாலையைக் கடக்க முயன்றபோது வாகனம் மோதியதால் இறந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here