சொகுசு வாகனங்கள் திருட்டுடன் சம்பந்தப்பட்ட 9 பேர் கைது; 3 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள 26 சொகுசு வாகனங்கள் மீட்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 27 :

பல மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, 3 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள 26 திருடப்பட்ட சொகுசு வாகனங்களை போலீஸார் மீட்டுள்ளதுடன் 9 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

கடந்தாண்டு டிசம்பர் முதல் இந்தாண்டு ஏப்ரல் வரை நடத்தப்பட்ட Ops Lejang என்ற குறியீட்டுப் பெயரில் 30 முதல் 40 வயதுடைய ஒன்பது ஆண்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட வாகனங்களில் 12 தோயோத்தா வெல்ஃபயர்ஸ், மூன்று மெர்சிடிஸ் பென்ஸ், மூன்று பிஎம்டபிள்யூ கார்கள் மற்றும் ஒரு ஃபோர்டு ரேஞ்சர் ஆகியவை அடங்கும் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் தெரிவித்தார்.

“திருட்டுக்கும்பலால் திருடப்பட்ட வாகனங்களின் விவரங்களை ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்ட அல்லது காப்பீட்டு நிறுவனங்களால் மொத்த இழப்பாக அறிவிக்கப்பட்ட வாகனங்களுடன் இவற்றை மாற்றும்.

“விவரங்கள் மாற்றப்பட்ட பிறகு, இந்தக் கும்பல் திருடப்பட்ட வாகனங்களை சாலைப் போக்குவரத்துத் துறை மற்றும் புஸ்பகம் ஆகியவற்றில் பதிவு செய்யும்” என்று அவர் புதன்கிழமை (ஏப்ரல் 27) நகர காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இவ்வாறு பதிவு பெற்ற பின்னர், விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு வாகனத்திற்கும் இக்கும்பலால் RM30,000 முதல் RM40,000 வரை வருமானம் ஈட்ட முடிந்தது என்று ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அஸ்மி கூறினார்.

“இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது, மேலும் இவ்வழக்குடன் சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பை நாங்கள் நிராகரிக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here