16 வயது மகளை பலாத்காரம் செய்த இராணுவ வீரரான தந்தைக்கு 18 ஆண்டுகள் சிறை, 34 பிரம்படிகள் விதிப்பு

சிபு, ஏப்ரல் 28 :

தனது சொந்த மகளை பலாத்காரம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, இராணுவ வீரர் ஒருவருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 34 முறை பிரம்படித் தண்டனையும் விதித்து செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

மார்ச் 11 முதல் ஏப்ரல் 26 வரை லாங்ஹவுஸ் அறையில், தனது 16 வயது மகளை மூன்று முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நீதிபதி மாருதின் பாகான் முன்நிலையில், குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது , குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

நீதிபதி மாருதின் அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 10 பிரம்படிகளும் விதித்தார்.

மேலும்,குழந்தைகள் மீதான பாலியல் குற்றச் சட்டம் 2017 இன் பிரிவு 14 (a) இன் கீழ், நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்குமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தலா ஒரு பிரம்படித் தண்டனையும் விதிக்கப்பட்டது.

ஏப்ரல் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஒரே நேரத்தில் செயல்படுத்த நீதிபதி மாருதின் உத்தரவிட்டார்.

ஏப்ரல் 12 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் தனது தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஆசிரியையிடம் கூறியபோது இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது.

34 வயதான ஆசிரியை அளித்த புகாரின் பேரில் போலீசார் குற்றவாளியை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here