MCMC சான்றிதழ் இல்லாத உபகரணங்களுக்கு வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு RM18,000 அபராதம்

பட்டர்வொர்த், ஏப்ரல் 29 :

மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையத்தால் (எம்சிஎம்சி) சான்றளிக்கப்படாத உபகரணங்களை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர், தகவல் தொடர்பு உபகரணக் கடையின் உரிமையாளருக்கு இன்று (ஏப்ரல் 29) இங்குள்ள தனி அமர்வு நீதிமன்றம் RM18,000 அபராதம் விதித்தது.

நீதிபதி நோர்ஹயாத்தி முகமட் யூனுஸ் முன்னிலையில் , 52 வயதான வாங் வான் லிங்கிற்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. இதில் எம்சிஎம்சியினால் சான்றளிக்கப்படாத 9 Pakite PAT225 வகை வயரில்லாத AV அனுப்பிகள் மற்றும் 7 Pakite PAT 535 வகை வயரில்லாத AV அனுப்பிகள் வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது .

இக்குற்றத்திற்கு 8,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது, மேலும் சான்றளிக்கப்படாத தகவல் தொடர்பு உபகரணங்களை வைத்திருந்த குற்றத்திற்காக இரண்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்தாண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி பிற்பகல் 3.09 மணிக்கு நியூஃப்ராகி ஸ்டோர், எண். 2, ஜாலான் பிறை ஜெயா 2, பண்டார் பிறை ஜெயா, பிறை ஆகிய இடங்களில் இந்தக் குற்றம் செய்யப்பட்டது.

மேலும் இரண்டாவது குற்றச்சாட்டில், எம்சிஎம்சியினால் சான்றளிக்கப்படாத Pakite RCA Wireless AV sender model PAT535 என்ற சாதனத்தை விற்பனை செய்ததற்காக RM10,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் தவறினால் இரண்டு மாத சிறை என தீர்ப்பு வழங்கப்பட்ட்டது.

மார்ச் 9, 2020 அன்று காலை 11 மணியளவில் அதே கடையில் இக் குற்றம் செய்யப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட வாங், அபராதத்தை செலுத்தினார். வழக்கறிஞர் லோ ஷீ வார்னே குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பில் ஆஜரானார்.எம்சிஎம்சியின் துணை அரசு வழக்கறிஞர் ஃபஸ்ரில் சானி முகமட் ஃபட்சில் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here