சுங்கை ஆரா அடுக்குமாடி குடியிருப்பில் தீப்பரவல்; குடியிருப்பாளர்கள் பீதி

ஜார்ஜ்டவுன், ஏப்ரல் 30 :

இங்குள்ள ஆரா கிரீன், சுங்கை ஆரா அடுக்குமாடி குடியிருப்பின் 16 ஆவது மாடியில்
நேற்றிரவு தீப்பிடித்ததால், அங்கிருந்த குடியிருப்பாளர்கள் பீதியடைந்தனர்.

இரவு 11.25 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் சில குடியிருப்பாளர்கள் கீழே ஓடினார்கள், சிலர் மற்ற குடியிருப்பாளர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கூச்சலிட்டனர்.

தீப்பிடித்த வீட்டின் உரிமையாளர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்பதும், சம்பவம் நடந்தவுடன் பாதிக்கப்பட்ட பெண் தப்பியோடியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

பாயான் பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுத் தளபதி ரொஹைசல் அப்துல் அஜீஸ் கூறுகையில், 11.25 மணியளவில் நடந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அழைப்பு வந்தது, ஐந்து நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு வந்தோம்.

“சம்பவ இடத்தில் நடந்த ஆய்வின் அடிப்படையில் , அடுக்குமாடி குடியிருப்பின் 16வது மாடியில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அறை தீயினால் 100 சதவீதம் சேதமடைந்துள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு காயங்கள் அல்லது விபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை, “என்று அவர் கூறினார்.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் தீயினால் ஏற்பட்ட மதிப்பிடப்பட்ட இழப்பு இன்னும் தீ தடயவியல் குழுவின் விசாரணையில் உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here