4.2 கிலோ தங்கம் கடத்தியதாக இரு மலேசியர்கள் கோயமுத்தூரில் கைது

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திய இரு மலேசியர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை காலை சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்காணித்தனர்.ப்விமானத்தில் இருந்த மலேசிய பயணிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர்களது உடைமைகள் சோதனை செய்யப்பட்டன.

அப்போது அவர்கள் கொண்டு வந்த பைகளில் ரூ.2.26 கோடி மதிப்புள்ள 4.2 கிலோ தங்கம் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தம்பதியை தடுத்து நிறுத்தி தங்கத்தை பறிமுதல் செய்தனர். இருவரும் இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here