வெள்ள நிலைமை சீரடைந்ததை தொடர்ந்து, பொந்தியானில் செயல்பாட்டிலிருந்த இறுதி நிவாரண மையம் நேற்று மாலை மூடப்பட்டது

ஜோகூர் பாரு, மே 7 :

வெள்ளம் வடிந்ததை அடுத்து , பொந்தியான் மாவட்டத்தில் செயல்பாட்டிலிருந்த இறுதி தற்காலிக வெள்ள நிவாரண மையம் நேற்று மாலை மூடப்பட்டது.

பொந்தியான் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு (JPBD) செயலகம், நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், கம்போங் ஸ்ரீ சிகாம்புட்டைச் சேர்ந்த நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 19 நபர்களை தங்கவைக்கப்பட்டிருந்த செக்கோலா கேபாங்சான் (SK) மலாயு ராயாவில் உள்ள நிவாரண மையம் நேற்று மாலை 5 மணிக்கு மூடப்பட்டதாகக் கூறியது.

“நேற்று வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகு அந்தக் கடைசி நிவாரண மையம் மூடப்பட்டது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மே 4 ஆம் தேதியன்று, அதிகாலை 5.30 மணிக்குத் தொடங்கிய தொடர் கனமழையால் கம்போங் ஸ்ரீ சிகாம்புட், கம்போங் ஜசா செபாகாட் மற்றும் கம்போங் புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின, இதன் விளைவாக 31 குடும்பங்களைச் சேர்ந்த 168 நபர்கள் இடம்பெயர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here