கோத்தா திங்கி, மே 8 :
ரோயல் மலேசியன் நேவியின் (TLDM) திறமையால், நேற்று கடல் வழியாக நாட்டிற்குள் ஊடுருவ விரும்பிய ஒன்பது சட்டவிரோத குடியேறிகளின் முயற்சிகளை முறியடிக்கப்பட்டது.
இது தொடர்பில் TLDM வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தெலுக் ரமுனியாவிற்கு தெற்கே 1.5 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள தெற்கு ஜோகூர் கடற்பகுதியில், அனைத்து சட்டவிரோத குடியேற்றிகளும் இரவு 9.45 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைத்து சட்டவிரோத குடியேறிகளில் எட்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணும் அடங்குவர் என்றும் அவர்கள் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்தோனேசிய குடிமக்கள் என்று நம்பப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சட்டவிரோத குடியேறிகளும் பெங்காராங் படகுத்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணை மற்றும் கோவிட்-19 ஸ்கிரீனிங் சோதனைக்காக மெர்பதி ஆப் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அத்தோடு சம்பந்தப்பட்ட அனைத்து சட்டவிரோத குடியேற்றவாசிகளும் மேலதிக விசாரணைக்காக ரோயல் மலேசியன் காவல்துறையிடம் (PDRM) ஒப்படைக்கப்படுவார்கள் “என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.