பலத்த புயல் காற்றினால் சிரம்பானில் 3 வீடுகள் சேதம்

சிரம்பானில்  வீசிய புயல் மற்றும் கனமழையால் இங்கு அருகே உள்ள கம்போங் கெடோக், ஜெமென்சேயில் உள்ள மூன்று வீடுகள் சேதமடைந்தன.

Gemenceh தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் Norfaizal Ahmad கூறுகையில், நேற்று மாலை ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில் பலத்த காற்றினால் வீடுகளின் கூரைகள் பறந்தன. மரங்கள் முறிந்து விழுந்ததில் சில வீடுகளும் சேதமடைந்தன.

புயல் காரணமாக ஜெமென்சே-ஜெமாஸ் பிரதான சாலை மற்றும் ஜாலான் கம்போங் கெடோக் ஆகிய இடங்களில் 10 மரங்கள் வேரோடு சாய்ந்தன, இதன் விளைவாக அப்பகுதி போக்குவரத்துக்கு தற்காலிகமாக மூடப்பட்டது. விழுந்த மரங்கள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது என்று பெர்னாமாவை இங்கு தொடர்பு கொண்டபோது கூறினார்.

எவ்வாறாயினும், இதுவரை எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட வீடுகளின் விவரங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மின் அபாயங்கள் மற்றும் நிலச்சரிவுகள் குறித்து அவதானமாக இருக்க குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டுவதாகவும் நோர்பைசல் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here