கோலாலம்பூர், மே 10 :
டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் லண்டன் நகரில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை அதிகாலை அங்கு சென்றடைந்தார்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு (மலேசிய நேரப்படி காலை 9 மணிக்கு) லூட்டன் விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமரை, லண்டனுக்கான மலேசிய தூதர் ஜாக்ரி ஜாபர் வரவேற்றார்.
மேலும் துணை மலேசிய மலேசிய தூதர் ஜாஹிட் ரஸ்தம் மற்றும் லண்டனை தளமாகக் கொண்ட மலேசியத் துறைகள் மற்றும் ஏஜென்சிகளின் தலைவர்கள் இஸ்மாயில் சப்ரியை ஹோட்டலில் வரவேற்றனர்.
ஆசியான்-அமெரிக்கா சிறப்பு உச்சி மாநாட்டிற்கு மலேசிய தூதுக்குழுவை வழிநடத்த வாஷிங்டன் டிசி செல்லும் இஸ்மாயில் சப்ரி, லண்டனிலுள்ள மலேசிய தூதரகத்தில் லண்டன் கைவினை வாரத்துடன் இணைந்து நடைபெறும் “Tenun Pahang: Weaving Hope” கண்காட்சியை பார்வையிட உள்ளார்.
அவர் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியாவுடன் இணைந்து இக் கண்காட்சியை பார்வையிடவுள்ளார். இவ்வாறு கண்காட்சி ஒழுங்கமைத்திருப்பது இதுவே முதல் முறை.
நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமான “Tenun Pahang: Weaving Hope” கண்காட்சி, மே 15ஆம் தேதி வரை நடைபெறும்.
இன்று (மலேசிய நேரப்படி நள்ளிரவு) மாலை 5 மணிக்கு வாஷிங்டன் டிசிக்கு செல்வதற்கு முன், ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் மலேசியர்களுடன் ஹரி ராயா அய்டில்ஃபிட்ரி கெலுர்கா மலேசியா நிகழ்விலும் பிரதமர் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.