இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கணவன், மனைவி பலி; பலியான தம்பதியின் இரு பிள்ளைகள் உட்பட ஐவர் காயம்

கோத்தா பாரு, மே 10 :

கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையின் 73ஆவது கிலோமீட்டரில், தித்திவாங்சா மலைத்தொடருக்கு அருகில் உள்ள ஜெலி-கெரிக் என்ற இடத்தில், நேற்று நண்பகல் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒரு தம்பதியினர் உயிரிழந்தனர், மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

மாலை 6.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்ட முகமட் அஸ்மி இமாஸ்,47, மற்றும் அவரது மனைவி ரோஹானி அப்துல்லா, 48 ஆகியோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் பலியான தம்பதியரின் 14 மற்றும் 18 வயதுடைய இரு பிள்ளைகள் பலத்த காயமடைந்ததுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்த தம்பதி கெடாவில் உள்ள புக்கிட் காயு ஈத்தாமில் தங்கள் மகனை படிக்க அனுப்பிவிட்டு, திரெங்கானுவில் உள்ள கோலப் பெராங்கிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

ஜெலி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் முகமட் அட்னி இப்ராஹிம் கூறுகையில், மாலை 6.54 மணிக்கு பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பு வந்தது.

ஜெலி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் அதிகாரிகள் உட்பட ஒன்பது உறுப்பினர்கள், வாகனத்தில் சிக்கி பலியானவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, உதவி வழங்க சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.

“இடத்திற்கு வந்தவுடன், Nissan Latio கார் மற்றும் நான்கு சக்கர வாகனம் Mitsubishi Triton ஆகிய இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தை அவர்கள் கண்டனர்.

“Nissan Latio காருக்குள் இரண்டு பேர் சிக்கிக் கொண்டனர், அவர்கள் இறந்தது உறுதி செய்யப்பட்டது. பணியில் இருந்த உறுப்பினர்கள் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி ஐந்து நிமிடங்களில் காருக்குள் சிக்கியவர்களை அகற்றினர்.

மேலும் இவ்விபத்தில் “காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஜெலி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here