பின்னால் வந்த கார் மோதியதில் கணவன்-மனைவி உயிரிழப்பு

கூச்சிங், மே 12 :

இங்குள்ள ஜாலான் FAC, மாத்தாங்கில், இன்று காலை அவர்கள் பயணம் செய்த காரை பின்னால் இருந்து வந்த மற்றொரு கார் மோதியதில் கணவன் மற்றும் மனைவி இறந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அப்துல் வஹாப் யூசுப், 52, மற்றும் அவரது மனைவி, சுலியானி ஜிமோ, 54, ஆகியோர் உள் காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இன்று காலை 7.13 மணிக்கு விபத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அனுப்ப EMRS ஆம்புலன்ஸின் உதவியைக் கோரி, மருத்துவ அவசரக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து (MECC) தமது துறைக்கு அழைப்பு வந்ததாகக் கூறினார்.

“பெரோடுவா ஆக்சியாவுடன் தோயோத்தா யாரிஸ் (Toyota Yaris) வாகனம் விபத்துக்குள்ளானது. தோயோத்தா யாரிஸின் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார், அதே நேரத்தில் பெரோடுவா ஆக்சியாவின் ஓட்டுநரும் பயணியுமான கணவன்-மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

“காயமடைந்தவர் சரவாக் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இறந்தவர்களின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

சம்பவ இடத்தில் இருந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் கூற்றுப்படி, தம்பதியினர் சடோக்கில் பார்க்கிங் உதவியாளராக வேலை செய்து கொண்டிருந்தனர் என்றும் வேலைக்குச் செல்லும் வழியிலேயே இந்தச் சம்பவம் ஏற்பட்ட்து என்றும் அறியமுடிந்தது.

விபத்தின்போது, தம்பதிகள் சென்ற கார் சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. தம்பதியினருக்கு 12 மற்றும் 16 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

மறைந்த அப்துல் வஹாப்பின் சகோதரியும் கடந்த ஆண்டு ஒரு சாலை விபத்தில் இறந்ததார் என்று அவரது குடும்பத்தினர் தங்களது கவலையை வெளிப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here