விலைமாதர்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க ‘தமக்கு மாதவிடாய்’ என்று சாக்கு சொல்கிறார்கள்

அலோர் ஸ்டார், மே 16 :

பாலியல் சேவைகளை வழங்குவதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண், சோதனையின் போது ‘தனக்கு மாதவிடாய்’ என்ற காரணத்தை கூறி, சட்ட அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க முயன்றார்.

இருப்பினும், வியட்நாமிய பெண்ணின் இந்த தந்திரம் பலிக்கவில்லை, Op Gegar சோதனையின்போது, அவர் அரை நிர்வாண நிலையில் இருந்தார். அந்த 20 வயது பெண்ணின் தந்திரம் அவரது உள்ளூர் வாடிக்கையாளரால் கசிந்துள்ளது.

ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு பாலியல் சேவைகளை வழங்குவதாக கிடைத்த தகவலின்பேரில், நேற்று கெடா குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் அந்தப் பெண்ணும் ஒருவராவார்.

வாடிக்கையாளர்களைக் கண்டறிய WeChat அப்ளிகேஷனைப் பயன்படுத்திய அந்தப் பெண், ஒரு மணி நேரத்திற்கு RM200 வரை வசூலித்தது தெரியவந்துள்ளது.

மாநில குடிநுழைவுத்துறை (கட்டுப்பாட்டு) முதன்மை துணை இயக்குநர் ரோஸ்மலிசா முகமட் ரஷித் கூறுகையில், இரண்டு ஹோட்டல்களில் ஒழுக்கக்கேடான செயல்கள் நடப்பது குறித்த தகவலை பெற்றதும், 16 அதிகாரிகள் கொண்ட குழு இரவு 8.30 மணி தொடங்கிய சுமார் 3 மணி நேர நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

“இந்த நடவடிக்கையில், 12 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் அடங்கிய மொத்தம் 21 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர், அவர்களில் 7 பேர் அனுமதித்த கால அளவை விட அதிக நாட்கள் நாட்டில் தங்கியிருப்பதைத் தவிர, வேறு சரியான ஆவணங்கள் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

“குற்றத்தைச் செய்ததற்காக கைது செய்யப்பட்ட அனைவரும் 3 வியட்நாம் பெண்கள் மற்றும் 4 தாய்லாந்து பெண்களும் அடங்குவர், மேலும் அவர்கள் சோதனையின் போது கிடைத்த பல ஆதாரங்களின் அடிப்படையில் விபச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நம்பப்படுகிறது” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, அவர்கள் வசித்த ஹோட்டல் அறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் போதைப்பொருள் உறிஞ்சும் கருவிகள் இருந்தது சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது கூற்றுப்படி, அனைத்து சட்டவிரோத குடியேற்றவாசிகளும் (PATI) பெலான்டெக் சிக் குடிநுழைவு தடுப்புக் முகாமிற்கு அனுப்பப்படுவார்கள், மேலும் குடியேற்ற சட்டம் 1959/63இன் பிரிவு 6 (1) (c) மற்றும் பிரிவு 15 (1) (c) ஆகியவற்றின் படி வழக்கு விசாரிக்கப்படும். .

“முதற்கட்ட விசாரணையில், சட்டவிரோதமாக குடியேறியவர்களில் சிலர், கோல பெர்லிஸ், பெர்லிஸ் மற்றும் சுங்கை கோலோக் கிளாந்தான் ஆகிய இடங்களூடாக சட்டவிரோதமாக கடல் வழியாக நுழைந்தது கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here