வேலைக்கு செல்வோர் கடந்தாண்டு விபத்துகளில் சிக்கிய  எண்ணிக்கை 56,990

ஒவ்வொரு நாளும் நிகழும் மூன்று ஊழியர் இறப்புகளில் இரண்டு பேர் வேலைக்குச் செல்லும் மற்றும் திரும்புபவர்கள் என தெரிய வந்துள்ளது. சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (SOCSO) புள்ளிவிவரங்கள், கடந்த ஆண்டு ஏஜென்சிக்கு பதிவு செய்யப்பட்ட வேலைக்கு செல்வோர் விபத்துகளில் சிக்கிய  எண்ணிக்கை 56,990 வழக்குகளாகும். இது 2020 இல் 68,183 ஆக இருந்தது.

SOCSO தலைமை நிர்வாகி டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அஜிஸ் முகமது, நாடு தற்போது கோவிட்-19 இறுதி நிலைக்கு மாறிய கட்டத்தில் இருப்பதால் பொருளாதாரத் துறை மீண்டும் முழு செயல்பாட்டிற்கு திரும்பியுள்ளது. மேலும் அதிகமான மலேசியர்கள் இ-ஹெய்லிங்காக சுயதொழில் செய்யத் தேர்வு செய்கிறார்கள்.

இந்த காலகட்டத்தில் தொழில் விபத்துக்களின் போக்கு 16% மேலாக குறைந்துள்ளது மற்றும் இயக்கம் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தியதன் காரணமாக குறைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது பலர் அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டில் வேலை இருந்தே வேலை செய்கிறார்கள்.

இருப்பினும், SOCSO இந்த சிக்கலை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. ஏனெனில் விபத்துக்கள் குடும்ப உறுப்பினர்கள், முதலாளிகள் மற்றும் நாட்டின் உற்பத்தித்திறன் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது சம்பந்தமாக, SOCSO மற்றொரு புதிய விபத்து தடுப்பு அணுகுமுறை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதாவது Ops Cegah என்று அவர் இன்று கூறினார்.

இன்று தொடங்கி மே 31 ஆம் தேதி வரை நாடு முழுவதும் 15 நாட்களுக்கு செயல்படுத்தப்படும் ‘தொழிலாளர்களின் விபத்துகளைச் சமாளிக்க ஒன்றிணைவோம்’ என்ற கருப்பொருளுடன் தேசிய தடுப்பு ஆப்ஸ் 2022 இன் தொடக்க விழாவில் அவர் இவ்வாறு கூறினார். Ops Cegah மூலம், SOCSO நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்திற்கு தகவல் மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம் அவர்களின் ஊழியர்களுக்கு தொழில் விபத்துகளைத் தடுப்பதற்கான நடைமுறைகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here