பேராக், கம்பாரில் உள்ள ஒரு நபர் தனது அண்டை வீட்டாரின் உள்ளாடைகளைத் திருடியது கேமரா வழி தெரிய வந்துள்ளது என்று என்று மலேசியா ட்ரெண்ட் தெரிவித்துள்ளது. யுனிவர்சிட்டி துங்கு அப்துல் ரஹ்மான் (UTAR) அருகில் உள்ள மாணவர் குடியிருப்பு பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் வைரலான சிசிடிவி காட்சிகளின்படி, திருடன் இரவில் சந்தேகத்திற்கிடமான முறையில் அந்த பகுதியில் நடமாடுவதைக் காணலாம். பின்னர் அவர் துணி ரேக்கில் இருந்து பெண்களின் உள்ளாடைகளை எடுக்கிறார். அதன்பின், உள்ளாடைகளை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தப்பியோடினார். இந்த வீடியோ கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் சமீபத்தில் வைரலாக பரவியது.









