ரொட்டி செனாய், தேநீர் ஆகியவற்றின் விலை 10% முதல் 20% வரை உயரும்

உணவக உரிமையாளர்கள் பொருட்களின் விலை உயர்வை எதிர்கொள்வதால், ரொட்டி செனாய் (பரோட்டா)  மற்றும்  தேநீர் ஆகியவற்றின் விலை அதிகமாக இருக்கும் என்று தி மலேசியன் இன்சைட் தெரிவித்துள்ளது. உணவக உரிமையாளர்கள் தி மலேசியன் இன்சைட்டிடம் சில விற்பனை நிலையங்கள் ஏற்கெனவே தங்கள் விலைகளை உயர்த்திவிட்டதாகவும் மற்றவை அடுத்த மாதம் அவ்வாறு செய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.

விலைகள் பொதுவாக 10-20% உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சராசரியாக RM1.60 இருக்கும் ரொட்டி செனாய் ஆர்டரின் விலை RM2.20 ஆகவும்,  தேநீர் ஒரு கிளாஸ் RM1.80ல் இருந்து RM2.50 ஆகவும் இருக்கும்.

மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் (பிரெஸ்மா) தலைவர் ஜவஹர் அலி தாயிப் கான், உறுப்பினர்கள் இன்னும் தங்கள் விலையை உயர்த்தவில்லை என்றார். ரொட்டி செனாய் மற்றும் பிற  கட்டணங்கள் உயரும் என்று நாங்கள் நிச்சயமாக கேள்விப்பட்டோம்.

தற்போதைக்கு, நாங்கள் எங்கள் விலையை பராமரிக்க முயற்சிப்போம். ஆனால் எவ்வளவு காலம் என்று எங்களுக்குத் தெரியாது. பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்தால் அதை பரிசீலிப்போம். அதிகபட்சம் 10% உயர்வு இருக்கும். இது எங்களின் அதிக லாபத்திற்கான விலை உயர்வு இல்லை என்றும் பொருட்களின் விலையேற்றத்தினால் வந்தது.

எல்லோரும் கஷ்டப்படுத்துவதை போல நாங்கள் மக்களுக்கு சுமையை வழங்க  விரும்பவில்லை. வணிகம் இப்போது உயர்ந்துள்ளது. ஆனால் நாங்கள் இன்னும் எதிர்கொள்ளும் ஒரே பிரச்சினை ஊழியர்களின் பற்றாக்குறை என்று அவர் தி மலேசியன் இன்சைட்டிடம் தெரிவித்தார்.

ஜனவரியில் 25 கிலோ மாவு மூட்டை RM49.90 ஆக இருந்தது. ஆனால் இந்த மாதம் விலை RM62.90 ஆக உயர்ந்தது என்று ஜவஹர் கூறினார். வெண்ணெயின் விலை RM85ல் இருந்து RM100 ஆக உயர்ந்துள்ளது. உணவு இறக்குமதியில் நாடு அதிகளவில் தங்கியுள்ளமை இன்றைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு பங்களித்துள்ளதாக அந்தச் செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here