சிரம்பான், ஜூன் 1 :
ஜாலான் பந்தாய்-நீலாயில் கார் மோதியதில் 72 வயது சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று (ஜூன் 1) காலை சுமார் 8.30 மணியளவில், 26 வயதுடைய பெண் ஓட்டிச் சென்ற கார் சைக்கிள் மீது மோதியதில், சைக்கிள் ஓட்டுநர் கீழே விழுந்தார் என்று நீலாய் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் பாஸ்லி அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
“ஜாலான் பந்தாயிலிருந்து காஜாங் நோக்கி தனியாக சென்று கொண்டிருந்த அந்தப் பெண் ஒட்டிச் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து சைக்கிள் ஓட்டுநர் மீது மோதியதாக நாங்கள் நம்புகிறோம்.
சைக்கிள் ஓட்டி வந்தவர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் அந்தப் பெண் காயமின்றி இருந்தாள்.
சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும் இச்சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளை 016-289 5801 என்ற எண்ணில் ஆய்வாளர் நோர் பாட்சிலாமுகமட் சைனுடீனை தொடர்பு கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.









