நான் இன்னும் ஸூரைடாவை சந்திக்கவில்லை’ என்கிறார் பிரதமர்

கோலாலம்பூர், ஜூன் 5 :

டத்தோ ஸூரைடா கமாருதீனை தான் இன்னும் சந்தித்து அமைச்சரவையில் அவரது நிலைப்பாடு குறித்து விவாதிக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

“நான் ஸூரைடாவை சந்திக்கவில்லை. அவர் இன்னும் விடுமுறையில் இருக்கிறார். எனக்கும் ஸூரைடாவுக்கும் இடையிலான சந்திப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் ”என்று, இன்று தாமான் துகுவில் நடந்த உலக சுற்றுச்சூழல் தின விழாவில் கலந்து கொண்ட போது அவர் கூறினார்.

டத்தோ ஸூரைடா புதிதாக உருவாக்கப்பட்ட பார்ட்டி பங்சா மலேசியாவில் (PBM) சேருவதற்காக முஹிடின் யாசினின் பெர்சத்து கட்சியிலிருந்து இருந்து விலகுவதாக முன்னர் அறிவித்திருந்தார்.

அவரது நியமனம் கட்சியின் ஒதுக்கீட்டை விட அதிகமாக இருந்ததாக பெர்சத்து கட்சி கூறியபோது, அவரது அமைச்சர் பதவி கேள்விக்குறியாகியது.

முன்னதாக, ஸூரைடாவின் நிலைப்பாடு குறித்து இஸ்மாயில் சப்ரியிடம் கேட்டபோது, அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், இன்னும் அமைச்சரவையில் உறுப்பினராக இருக்கிறார் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here