கிளாந்தானில் உள்ள 9 மாவட்டங்களில் கை, கால் மற்றும் வாய் நோய் சிவப்பு மண்டலத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன

கோத்தா பாரு, ஜூன் 6 :

நேற்று வரையிலான 10 நாட்களில் கிளாந்தானில் உள்ள ஒன்பது மாவட்டங்கள் கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) வழக்குகள் சிவப்பு மண்டலத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன என்று கிளாந்தான் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஜைனி ஹுசின் தெரிவித்துள்ளார்.

சிவப்பு மண்டலத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்களில், மிக அதிகமாக கோத்தா பாருவில் 705 வழக்குகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து மாச்சாங் (157 வழக்குகள்), தும்பாட் (126 வழக்குகள்), பாசீர் மாஸ் (116 வழக்குகள்), தானா மேரா (96 வழக்குகள்) ), கோலக் கிராய் (92 வழக்குகள்), பச்சோக் (89 வழக்குகள்), குவா மூசாங் (85 வழக்குகள்) மற்றும் பாசீர் பூத்தே (75 வழக்குகள்) ஆகியனவும் பதிவாகின.

ஜெலி என்ற ஒரு மாவட்டம் மட்டுமே 47 வழக்குகளுடன் மஞ்சள் மண்டலத்தில் இருப்பதாக அவர் கூறினார்.

” Epidemiology Week (ME) 22/2022 இல் நேற்று வரையிலான 10 நாட்களில் மொத்தம் HFMD வழக்குகளின் எண்ணிக்கை 1,588 ஆக இருந்தது. இந்த ஆண்டு மொத்தமாக 5,782 நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன.

மேலும் கருத்து தெரிவித்த டாக்டர் ஜைனி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை வழக்கமான வார்டில் இரண்டு வழக்குகள் மற்றும் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவிலும் (ICU) சிகிச்சை பெற்றார் என்றார்.

அத்தோடு மாநிலத்தில் HFMD தொற்று கடுமையானது அல்ல, மாறாக லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here