நாட்டில் மொத்தம் 82,846 கை, கால் மற்றும் வாய் நோய் வழக்குகள் பதிவு

கோலாலம்பூர், ஜூன் 7 :

நாட்டில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வரை மொத்தம் 82,846 கை, கால் மற்றும் வாய் நோய்கள் (HFMD) பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 32 மடங்கு அதிகமாகும் என்று சுகாதார தலைமை இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

நாட்டில் HFMD வழக்குகளின் ஒட்டுமொத்த அதிகரிப்புக்கு சிலாங்கூர் மாநிலத்தில் அதிக தொற்றுக்கள் அதாவது 28.13 விழுக்காடு அல்லது 23,305 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா (9,540 வழக்குகள்) மற்றும் பேராக் (8,032 வழக்குகள்), கிளாந்தான் (5,782 வழக்குகள்) மற்றும் ஜோகூர் (5,234 வழக்குகள்) என்பன பதிவாகியுள்ளன.

“ஏனைய மாநிலங்கள் 4,600 க்கும் குறைவான HFMD வழக்குகளை பதிவு செய்துள்ளன.

HFMD வழக்குகளில் 90 விழுக்காடு (74,841 பேர்) ஆறு வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகளிடையே ஏற்படுகிறது.

“6,520 வழக்குகள் (8 விழுக்காடு) ஏழு முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள், மீதமுள்ளவர்கள் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள், இது மொத்தம் 1,485 வழக்குகள் (2 விழுக்காடு)” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here