மானிய விலையில் பெற்ற பெட்ரோலை முறைகேடாக பயன்படுத்தியதாக 3 பேர் கைது

கோத்தா கினாபாலு, ஜூன் 8 :

பத்து 32, சண்டகானில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று மானிய விலையில் பெற்ற பெட்ரோலை முறைகேடாக பயன்படுத்தியதாக வெளிநாட்டு வாலிபர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிகாலை 1.30 மணியளவில் இந்த நடவடிக்கையானது பொது நடவடிக்கைப் படையின் (PGA) டைகர் பிளாட்டன் பட்டாலியன் 15 மற்றும் சண்டகானின் புலனாய்வுப் பணிக்குழு உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது.

சபா பிஜிஏ பிரிகேட் கமாண்டர், மூத்த துணை ஆணையர் அப்துல் ராணி அலியாஸ் கூறுகையில், பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், மானிய விலையில் பெற்றோலை சட்டவிரோதமாக நிரப்பியதை செயல்பாட்டுக் குழு கண்டறிந்தது.

அதன் பின்னர் நடவடிக்கைக் குழுவினர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 30 நிமிடங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.

“கண்காணிப்பின் முடிவுகள் 19 முதல் 36 வயதுடைய மூன்று ஆண்களைக் கைது செய்ய வழிவகுத்தது, இதில் இரண்டு உள்ளூர்வாசிகள் மற்றும் ஒரு இந்தோனேசியரும் அடங்குவர். அத்தோடு அவர்கள் பயன்படுத்திய மூன்று லோரிகள் உட்பட 58 நீல பீப்பாய்கள் 4,400 லிட்டர் பெட்ரோல் ஆகியவற்றையும் பறிமுதல் செய்ததாகவும் அவர் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு RM109,020 என்றும், இவ் வழக்கு விநியோக கட்டுப்பாடு சட்டம் 1961-ன் படி வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here