வாய்க்காலில் இருந்து 44 வயதுடைய ஓர் ஆணின் சடலம் மீட்பு

பண்டமாரான், ஜூன் 9 :

இங்குள்ள பண்டமாரான் பகுதியிலுள்ள ஒரு வாய்க்காலில் இருந்து, 44 வயதுடைய ஓர் ஆணின் சடலத்தை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் மீட்டனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் மேற்பார்வையாளர் நட்ஸ்ரி மஸ்யானி கூறுகையில், காலை 8.17 மணியளவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும், போர்ட் கிள்ளான் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஆறு தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு மற்றும் ஒரு தீயணைப்பு இயந்திரத்துடன் சென்ற குழுவினர் சடலத்தை மீட்டனர்.

பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here