பண்டாமாரானில் ஏற்பட்ட தீ விபத்தில், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து நாசம்

கிள்ளான், ஜூன் 9 :

பண்டாமாரானில் இன்று நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தில், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து நாசமாயின.

இன்று (ஜூன் 9) நண்பகல் 1.12 மணியளவில், தீ விபத்து குறித்து தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் தளபதி ரசிப் முகமட் ஹரிஸ் தெரிவித்தார்.

“கிள்ளான், அண்டாலாஸ் மற்றும் கோத்தா ராஜா தீயணைப்பு நிலையங்களில் இருந்து 21 பணியாளர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன,” என்று அவர் கூறினார்.

“அவர்கள் நண்பகல் 1.33 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், சிறிது நேரத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர் என்றும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.” என்றும் ரசிஃப் கூறினார்.

மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here