ஜனுஷாவின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்த மாமன்னர் தம்பதியர்

அமெரிக்க கடற்படை அகாடமியில் பட்டம் பெற்ற முதல் மலேசிய பெண் கடற்படை மூத்த கேடட் அதிகாரி  ஜனுஷா பாலகிருஷ்ணன் முத்தையா மாமன்னர் தம்பதியரிடம் இருந்து அரச வாழ்த்துகளைப் பெற்றார்.

இஸ்தானா நெகாரா அறிக்கை ஒன்றில், அரச தம்பதியினர், அவரது சிறப்பான சாதனை, ஜனுஷா மற்றும் ராயல் மலேசியன் கடற்படையின் (RMN) பிற பணியாளர்களைத் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், ராணுவத் துறையில் வெற்றி பெறவும் ஊக்குவிக்கும் என்று நம்புவதாகக் கூறியது.

பகாங்கில் உள்ள கோல  லாபிஸ் நகரைச் சேர்ந்த 23 வயதான ஜனுஷா, அமெரிக்காவின் புகழ்பெற்ற ராணுவ அகாடமியில் அனுமதிக்கப்பட்ட முதல் மலேசியப் பெண்மணி ஆவார்.

2018 ஆம் ஆண்டு அன்னாபோலிஸில் உள்ள அமெரிக்க அகாடமியில் அமெரிக்காவிலிருந்து 1,085 பயிற்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து 14 பயிற்சியாளர்களுடன் தனது நான்கு ஆண்டு காலப் பணியைத் தொடங்கினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன், அமெரிக்க கடற்படையின் உயர்மட்டத் தலைவர் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதர்கள் முன்னிலையில், பாஸ்சிங் அவுட் அணிவகுப்பு நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here