யான், ஜூன் 14 :
பூலாவ் புந்திங்கிலிருந்து வடமேற்கே 7.0 கடல் மைல் தொலைவில், மிதந்த நிலையில் இன்று ஆண் ஒருவரின் சடலம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
கோலக் கெடா கடல்சார் அமலாக்க இயக்குநர், மாண்டர் நூர் அஸ்ரேயாண்டி இஷாக் கூறுகையில், காலை 10.50 மணியளவில் மீனவர்கள் சடலத்தைக் கண்டுபிடித்தனர் என்றும், அவர்கள் MERS 999 மூலம் தகவல் அளித்தனர் என்றும் கூறினார்.
“மீட்கப்பட்ட உடல் பின்னர் கோலக் கெடா படகுத்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக மலேசியன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் இன்றுவெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சடலத்தை அடையாளம் காணும் நடவடிக்கைக்காக, குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் யான் காவல் நிலையத்தை 04-4655222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.









