கோலாலம்பூர், ஜூன் 17 :
முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியை விட்டு வெளியேறுவதற்கு, அஸ்மின் அலியும் ஜுரைடா கமாருதீனைப் பின்பற்றப் போவதாக எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக, பெர்சத்து கட்சியின் இலட்சியங்களும் கொள்கைகளும் “எனது அடையாளம்” என்று அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
‘தூய்மையான, வெளிப்படையான நல்லாட்சி மற்றும் சமூக நீதிக்கு அர்ப்பணிப்புள்ள அரசாங்கத்தை உருவாக்க கட்சியின் உறுப்பினர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றுவேன்’ என்று சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் இருக்கும் அஸ்மின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








