கோத்தா கினாபாலுவிலுள்ள ஓர் உணவகத்தில் நீராவிப் பானை (steamboat pot) வெடித்ததில் நான்கு பேர் காயம்

கோத்தா கினாபாலு, ஜூன் 20 :

அலாமேஸ்ராவில் உள்ள ஒரு உணவகத்தில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) அவர்கள் பயன்படுத்திய நீராவிப் பானை வெடித்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

இரண்டு பெரியவர்களுக்கு மோசமான தீக்காயங்கள் ஏற்பட்டதாக அறிய முடிகிறது , ஆனால் குழந்தைகள் எவ்வளவு மோசமாக காயமடைந்தனர் என்பது பற்றி தகவல் தெரியவில்லை.

சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு துணை இயக்குநர் மிஸ்ரான் பிசாரா கூறுகையில், இரவு 9.06 மணிக்கு சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது.

“நாங்கள் வந்தபோது, ​​இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்தில் இருந்தவர்களால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்,” என்று அவர் கூறினார்.

காயமடைந்த இரண்டு பெரியவர்களான வுஜோன் மேரி மே மற்றும் ராபர்டோ அன்டோனி, 28, ஆகியோர் ஆம்புலன்ஸ் வருவதற்கு காத்திருந்தனர்.

வுஜோன் மற்றும் ராபர்டோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, அவர்களுக்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டதாக மிஸ்ரான் கூறினார்.

மேலும் அங்கு வேறு எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு தீயணைப்பு வீரர்கள் காலை 9.41 மணிக்கு மீட்பு நடவடிக்கையை முடித்ததாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here