இன்று புதன்கிழமை அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து 44 கிமீ (27 மைல்) தொலைவில் 51 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அது தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தொடர்பான சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள சுமார் 119 மில்லியன் மக்களால் சுமார் 500 கிமீ தொலைவில் இந்த நடுக்கம் உணரப்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) வெளியிட்டுள்ள ஒரு டுவீட்டில் தெரிவித்துள்ளது.
இது ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலும் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் உணரப்பட்டது என்று EMSC இணையதளத்தில் மற்றும் டுவிட்டரில் பல பயனர்களால் வெளியிடப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளிக்காட்டுகின்றன.
ஏற்கனவே நேற்று நள்ளிரவில் மலேசியாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.









