நோயாளியின் உறவினர்களைத் தேடுகிறது கிள்ளான் மருத்துவமனை

கிள்ளான், ஜூன் 23 :

இங்குள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில், ஒரு மாதத்திற்கும் மேலாக அங்குள்ள வார்டில் இருக்கும் நோயாளியின் உறவினர்களை மருத்துவமனை நிர்வாகத்தினர் தேடுகின்றனர்.

யாப் செங் ஹெங், என அறியப்படும் இவர், கடந்த மே 19 அன்று வார்டு 1B இல் அனுமதிக்கப்பட்டார்.

அவரது கடைசியாக அறியப்பட்ட முகவரி லோரோங் பத்து நிலம் 34/2, புக்கிட் திங்கி, இது உள்ளூர் காவல் நிலையத்திற்கு அருகில் இருக்கும் பகுதி எனவும் அறியமுடிகிறது.

அந்த நபரை அல்லது அவரது உறவினர்களை அறிந்தவர்கள், HTAR இன் மக்கள் தொடர்புப் பிரிவை 03-33757000 என்ற எண்ணில் 1267 அல்லது வார்டு 1B என்ற எண்ணில் 1045 இல் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here