சரவாக்கில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 391 பேர் கைது

கூச்சிங், ஜூன் 24 :

கடந்த ஜூன் 21 முதல் 23 வரை சரவாக் மாநிலத்தில் போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ‘Ops Tapis Khas’ நடவடிக்கையில் 22 பெண்கள் உட்பட 391 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

சரவாக் போலீஸ் படை தலைவர், டத்தோ முகமட் அஸ்மான் அஹ்மட் சப்ரி கூறுகையில், சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில் 278 பேர் பல்வேறு போதைப்பொருள்களுக்கு சாதகமாக முடிவை பதிவு செய்தனர்.

போதைப்பொருள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

“ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் போதைப்பொருள் விற்பனையாளர்கள் எனநம்பப்படும் ஏழு சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகிறார்கள், அதே நேரத்தில் மற்ற ஏழு போதைப்பொருள் முகவர்கள் ஆபத்தான மருந்துகள் (சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்) சட்டம் 1985 இன் பிரிவு 3 (1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள்” என்று சரவாக் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (JSJN) தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here