மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் 200,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் சுய விருப்பத்தின் பேரில் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

லாரூட், ஜூன் 26 :

இந்த மாத இறுதி வரை (ஜூன் 26) நீட்டிக்கப்பட்ட மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், மொத்தம் 243,297 சட்டவிரோத குடியேறிகள் சுய விருப்பத்தின் பேரில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.

வியாழன் நிலவரப்படி, 282,561 சட்டவிரோத குடியேறிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

“இந்தச்செயல்முறை இந்த மாத இறுதியில் முடிவடையும் என்றும் அதன் பின்னர், வழக்கம் போல் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக நாங்கள் உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினார்.

“மேலும் அவர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்,” என்றும் அவர் நேற்று கம்போங் அனாக் கூராவ்வில் நடந்த ஒரு கூட்டத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

லாரூட்டின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹம்சா மேலும் கூறுகையில், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் திட்டத்தின் கீழ் சட்டவிரோத குடியேறிகளை சொந்த நாட்டிற்கு அனுப்ப பதிவு செய்யலாம் அல்லது மனிதவள மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம் நாட்டில் சட்டப்பூர்வமாக வேலை செய்யும் அனுமதிக்காக விண்ணப்பிக்கலாம் என்றார்.

“ஆரம்பத்தில், நாங்கள் சுமார் 200,000 பேரை மட்டுமே எதிர்பார்த்தோம், ஆனால் இப்போது திரும்பிச் செல்ல விரும்பும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை மற்றும் மீண்டும் வேலை செய்ய விரும்புவோரின் எண்ணிக்கை 400,000 ஐ எட்டியுள்ளது” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here