சண்டையில் நண்பர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர்

கோத்த கினாபாலு, சபாவின் கிழக்குக் கடற்கரை செம்போர்னா மாவட்டத்தில் 50 வயதுக்குட்பட்ட இருவர் அரிவாள் வெட்டு காயத்திற்கு ஆளாகி இருவர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) மாலை 4.30 மணியளவில் கெலும்பாங்கில் உள்ள லடாங் பினாங் அருகே 29 வயது இளைஞருடன் தவறான புரிதல் காரணமாக சண்டையிட்டார்.

இரண்டாவது நபர் சண்டையை தடுக்க  உள்ளே நுழைந்தார்.  பின்னர் தாக்கப்பட்டார். சந்தேக நபரின் தாக்குதலைத் தொடர்ந்து கழுத்து, கைகள் மற்றும் தலைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

செம்போர்னா காவல்துறைத் தலைவர் முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தினார். மாலை 6.21 மணிக்கு இந்த விஷயம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது.

29 வயதுடைய சந்தேக நபர் ஏற்கனவே ஆயில் பாம் தோட்டத்திற்கு போலீசார் வந்த போது கிராம மக்கள் பிடித்து வைத்திருந்ததாக அவர் கூறினார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக செம்பொர்னா போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார். கொலைக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here