130 பிரிவு தலைவர்கள் ஜாஹிட்டை வெளியேற்ற வேண்டும் என்கின்றனர் – தாஜுதீன் தகவல்

பாசீர்  சலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான், 2020ல்  கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற  அஹ்மட் ஜாஹிட் ஹமிடி பதவி விலக வேண்டும் என்று சுமார் 130 அம்னோ பிரிவுத் தலைவர்கள் விரும்பியதாகக் கூறுகிறார்.

ஒரு செய்தியாளர் கூட்டத்தில், முன்னாள் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் ஜாஹிட் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் வகையில் கட்சிக்குள் ஒரு இயக்கம் இருப்பதாகக் கூறினார்.

நாட்டில் உள்ள 191 பிரிவுகளில் 130 பிரிவுகளின் இந்த முயற்சி அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் தலைமையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், தோக் மாட் என்றும் அழைக்கப்படும் முகமட், அம்னோ தலைவரிடம் குறிப்பாணையை ஒப்படைக்க பயந்ததால், ஜாஹிட்டின் ராஜினாமாவுக்கான அழுத்தம் தோல்வியடைந்தது என்றும் அவர் கூறினார்.

தாஜுடினின் கூற்றுப்படி, அவரது வீட்டில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அம்னோ இளைஞரணித் தலைவர் அசிரஃப் வாஜ்டி டுசுகி மற்றும் அம்னோ துணைத் தலைவர் காலிட் நோர்டின் ஆகியோர் அடங்குவர். முன்னதாக, “கட்சிக்காக” அம்னோ தலைவர் பதவியை ராஜினாமா செய்யுமாறு ஜாஹிட்டை தாஜுடின் கோரிக்கை விடுத்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் பிரதமரானதால், தான் பிரதமராக முடியவில்லை என  ஜாஹிட் வருத்தமடைந்தார் என்று அவர் கூறினார். ஜாஹிட் கட்சிக்காகப் போராடவில்லை. அதிகாரத்தை மட்டுமே பெற விரும்புவதாகவும் தாஜுதீன் குற்றம் சாட்டினார்.

ஜாஹிட் தனது நீதிமன்ற வழக்குகளில் கவனம் செலுத்துமாறு நான் பரிந்துரைக்கிறேன். அம்னோவை அவரால் கவனிக்க முடியாது. அவரது நீதிமன்ற வழக்குகளில் அவர் வெற்றி பெற வேண்டும் என  பிரார்த்திக்கிறோம்  என்றார்.

அடுத்த பொதுத் தேர்தலில் (GE15) அவர் தலைமையில் அம்னோ  கட்சி வழிநடத்தப்பட்டால்  தோல்வியுடைய வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு  ஒரு நிலை ஏற்பட்டால் ஜாஹிட் தான் பொறுப்பு என்றும் தாஜுடின் கூறினார்.

அம்னோ தலைவருக்கு எதிராக பேச உறுப்பினர்கள் அச்சமடைந்திருப்பதாக  அவர் கூறினார், “வேட்பாளர்கள் கடிதங்கள் (surat watikah)”எழுதினால் அவர்கள் GE15 இல் போட்டியிட முடியாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம், அம்னோ உச்ச மன்ற  உறுப்பினர் பதவியில் இருந்து தாஜுடின் நீக்கப்பட்டார். கட்சியை விமர்சித்து வந்ததால் தாஜுதீன் நீக்கப்பட்டதாக ஜாஹிட் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here