நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணம்..!

பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இன்று அதிகாலை காலமானார். அவர் ஏற்கெனெவே நுரையீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கோவிட்-19 கிருமி தொற்றியதால், நுரையீரல் பாதிப்பு மோசமடைந்ததாகக் கூறப்பட்டது.

சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சில நாட்களாக அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

மீனாவின் கணவர் இறந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.திரையுலகினர் பலரும் தங்கள் ஆறுதலை மீனாவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை குஷ்பு, மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவு குறித்து சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மீனாவின் கணவர் சாகர் இறந்த செய்தி அறிந்து மனமுடைந்து போனேன். நுரையீரல் பிரச்சனையால் அவர் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். அவரை இழந்து வாடும், மீனா மற்றும் அவரது குழந்தைக்கு என் ஆழ்ந்த இரங்கல். வாழ்க்கை குரூரமானது. துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

மேலும் மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை. அவர் 3 மாதங்களுக்கு முன்னர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், அப்போது அவரது நுரையீரலில் பாதிப்பு தீவிரமானதால் தான் தற்போது அவர் உயிரிழந்துள்ளார். அதனால் இப்போது அவர் கொரோனாவால் தான் உயிரிழந்தார் எனக்கூறி அச்சத்தை கிளப்ப வேண்டாம் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here