சரவாக்கில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை RM9.80 முதல் RM13.90 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

கூச்சிங், ஜூன் 30 :

சரவாக்கில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை ஒரு கிலோவுக்கு RM9.80 முதல் RM13.90 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதே சமயம் கோழி முட்டைகளின் சில்லறை விலை, அவற்றின் A, B மற்றும் C தரங்களின்படி  தலா 43 சென் முதல் 50 சென் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலப்பகுதியில், உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் (KPDNHEP) வெளியிட்டுள்ள கோழி மற்றும் கோழி முட்டைகளுக்கான அதிகபட்ச விலை பட்டியலின் அடிப்படையில், இரண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை மண்டலத்திற்கு ஏற்ப மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here