கலவரத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

கோலாலம்பூர், Jalan Radin Bagus ஸ்ரீ பெட்டாலிங்கில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை போலீசார் கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் 20 முதல் 41 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் அமிஹிசாம் அப்துல் ஷுகோர் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் அனைவரும் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குக் காவலில் வைக்கப்பட்ட விண்ணப்பத்திற்காக அழைத்து வரப்படுவார்கள்.

இன்னும் தலைமறைவாக உள்ள சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் இன்னும் தொடர்கின்றன. சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 148/427 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுவதாக அமிஹிசாம் கூறினார். சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்துறையின் ஹாட்லைன் எண் 03-22979222, கோலாலம்பூர் காவல் துறையின் ஹாட்லைன் 03-21159999 அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

முன்னதாக, சமூக ஊடகங்களில் பாதிக்கப்பட்ட பல கார்களுக்கு எதிராக ஒரு ஆடவர்கள் குழு கலவரம் செய்து கார் கண்ணாடிகளை உடைத்து அட்டகாசம் செய்வதை வீடியோ காட்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here