வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வயதான தம்பதியர் பனைமரம், மூங்கில் கிளைகளில் தொங்கி காப்பாற்றி கொண்ட சம்பவம்

 

கெடா, பாலிங்கில் வயதான தம்பதியர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டபோது அவர்கள் ஒரு பனைமரம் மற்றும் மூங்கில் கிளைகளில் தொங்கி தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்.

58 வயதான ஹஸ்னா இஸ்மாயிலும் அவரது கணவர் சே நை இசா 59, வெள்ளம் விரைவாக உயர்ந்து தங்கள் வீட்டிற்குள் நுழைவதை கவனித்ததாக கூறினார். அருகில் உள்ள ரம்புத்தான் மரத்தில் ஏற முடிவு செய்தனர்.

இருப்பினும், ரம்புத்தான் மரம் கவிழ்ந்து போவது போல் தோன்றியது. எனவே தண்ணீரில் மிதக்கும் சில மரக்கட்டைகளைப் பிடிக்க முயற்சித்தோம் என்று ஹஸ்னா பெர்னாமாவிடம் நிவாரண மையத்தில் கூறினார். எனது கணவர் வலுவான நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக, சில மூங்கில் கிளைகளைப் பிடிக்க முடிந்தது.

நானும் அடித்துச் செல்லப்பட்டேன், ஆனால் ஒரு பனை மரத்தின் தண்டுகளைப் பிடிக்க முடிந்தது. நாங்கள் உதவிக்காக கூச்சலிட்டோம். ஆனால் யாரும் வரவில்லை என்று அவர் கூறினார். இருப்பினும், சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மீட்புக் குழுவினர் ஒரு படகில் வந்து அவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.

தண்ணீர் மிகவும் குளிராக இருந்ததால் நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன் என்று அவர் கூறினார். சிறுவயதிலிருந்தே Kampung Padang Empal தங்கியிருந்த ஹஸ்னா, இதுபோன்ற வெள்ளப்பெருக்கை இதற்கு முன் அனுபவித்ததில்லை என்றார்.

வெள்ளம் தனது வீட்டின் கூரையை அடைந்ததாகவும், அவர்கள் வளர்த்து வந்த 30 ஆடுகளைப் பற்றி கவலைப்பட்டதாகவும் அவர் கூறினார். ஊனமுற்ற தனது 20 வயது மகள் நோர் ஆலியா, முன்னதாக உயரமான இடத்திற்கு மாற்றப்பட்டதற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

முன்னதாக, குபாங்கில் உள்ள கம்போங் இபோய் என்ற இடத்தில், அவர்களது வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில், நான்கு மாத கர்ப்பிணிப் பெண் உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் காணவில்லை. நேற்று பெய்த கனமழையைத் தொடர்ந்து ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த மொத்தம் 334 பேர் பல நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here